நயன்தாரா முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஐரா. இப்படத்தில் இவருடன் கலையரசன், யோகிபாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நயன்தாரா முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் ஐரா. இப்படத்தில் இவருடன் கலையரசன், யோகிபாபு, மற்றும் பலர் நடித்துள்ளனர். வரும் மார்ச் 28ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தினை தயாரித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் நயன்தாரா, யோகிபாபு ஓடுவது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் அதில் யோகி பாபு நயனிடம் “நான் கொஞ்சம் இல்ல ரொம்ப வேகமா ஓடுவேன், உன்னால முடியலைனா ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடு ஓகே” என்ற கூறுவது போல ட்வீட் செய்துள்ளனர்.
கோலமாவு கோகிலா தொடர்ந்து நயன்தாராவுடன் ஐரா படத்தில் இணையும் யோகிபாபுவின் காமெடிக்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.