பிரியா வாரியர் மீது பாயும் இயக்குநர்…

பிரியா வாரியர் மீது பாயும் இயக்குநர்…
பிரியா வாரியர் மீது பாயும் இயக்குநர்…

தன்னுடைய கண்ணசைவின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியா வாரியர். இவர் ஒரு அடார் லவ் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

தன்னுடைய கண்ணசைவின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பிரியா வாரியர். இவர் ஒரு அடார் லவ் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் இந்த வருடம் காதலர் தினத்தன்று வெளியாகியது. ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. 

இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ஓமர் லூலு, பிரியா வாரியர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் இப்படத்தின் உண்மையான நாயகி நூரின் ஷெரீன் தான் என்றும் கண்ணடித்ததன் மூலம் பிரியா வாரியர் ஹிட்டானதும் அவருக்கு ஏற்ப கதையை மாற்றக்கோரி தயாரிப்பாளர் கூறியதாவும் அவர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்தே இப்படத்தின் கதை பிரியா வாரியருக்கு ஏற்ப மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பிரியாவாரியர் படத்தினால் புகழ் கிடைத்த பின்னர் பட புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை என்று குறிப்பிட்ட இயகுநர், பட ரிலீஸுக்கு பிறகு நடந்த படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவில்லை என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com