இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் குடியரசு மளிகையில் நடைபெற்றது.
இந்தாண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் குடியரசு மளிகையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 56 பேர் பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் மற்றும் பத்ம பூஷண் விருதுகள் பெற்றனர். இந்நிலையில் நடிகர் மோகன்லால் இந்திய நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷண் விருதை பெற்றார்.
டெல்லியில் ஜனாதிபதியிடம் இருந்து விருது பெற்ற மோகன்லால் நேராக ஹைதராபாத்தில் அமைந்துள்ள ’மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோகன்லால் பத்மபூஷண் விருது பெற்றதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது நடிகர்கள் சுனில் ஷெட்டி, நெடுமுடி வேணு, பிரியதர்ஷன் ஆகியோர் உடன் இருந்தனர்.