றெக்க கட்டி பறக்கும் நெடுநல்வாடை நாயகி…

றெக்க கட்டி பறக்கும் நெடுநல்வாடை நாயகி…

இளங்கோ,அஞ்சலி நாயர் நடிப்பில் செல்வகண்ணன் இயக்கத்தில்உருவாகியுள்ள படம் நெடுநல்வாடை.

இளங்கோ,அஞ்சலி நாயர் நடிப்பில் செல்வகண்ணன் இயக்கத்தில்உருவாகியுள்ள படம் நெடுநல்வாடை. மார்ச் 15ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து வரிகளில் இப்பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இப்படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக உள்ளதாகவும் இப்படம் வெளியான பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும் இவர் தற்போது விமானப் பணிப்பெண்ணாக பணிபுரிகிறார். இவருக்கு விமான பணிப்பெண்ணாக வேலை செய்வது பிடித்திருப்பதாகவும் அதிக படங்களை விட நல்ல படங்களில் நடிக்கவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

நெடுநல்வாடை ரிலீஸுக்கு பிறகு இவர் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com