வைரலாகும் சமந்தா-சின்மயி உரையாடல்… பூஜா ஹெக்டேக்கு குவியும் ஆதரவு…

வைரலாகும் சமந்தா-சின்மயி உரையாடல்… பூஜா ஹெக்டேக்கு குவியும் ஆதரவு…

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரை உருவ கேலி செய்யும் விதமாக நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். 

இதனை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார், மேலும் அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட எந்த செய்திகளையும் புறக்கணிக்குமாறு தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். மேலும் அவரது கணக்கு தற்போது மீட்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அந்த பதிவு சமந்தா ரசிகர்களை கோபப்படுத்தியதால் ட்விட்டரில் #PoojaMustApologizeSamantha யை ட்ரெண்டானது. இதனை தொடர்ந்து தனக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை என்பது போல சமந்தா தனது போட்டோவை பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில் எரியும் நெருப்பில் எண்ணெய்யில் ஊற்றும் விதமாக சமந்தா, நந்தினி ரெட்டி மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடையில் நடந்த ஒரு உரையாடல் ஸ்கிரீன் ஷாட் வைரலானது. அதில் பூஜாவின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த பூஜா ஹெக்டே ரசிகர்கள் முழு உண்மையும் தெரியாமல் ஒருவரை கிண்டல் செய்வது தவறான செயல் என்று கூறி பூஜாவுக்கு #WeSupportPoojaHegde என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்கள் தங்கள் ஆதரவை #PoojaMustApologizeSamantha,  #WeSupportPoojaHegde என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்