இது படம் அல்ல… பாடம்… பொன்மகள் வந்தாள் படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கருத்து…

இது படம் அல்ல… பாடம்… பொன்மகள் வந்தாள் படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா கருத்து…

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஓடிடி தளங்கள் நேரடியாக திரைப்படங்களை வெளியிடுகின்றன. அந்த வகையில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்மகள் வந்தாள்' படத்தை நாளை(மே 29) நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளார்கள்.

இந்த படத்தில் கே.பாக்கியராஜ், ஆர்,பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநர் பாரதிராஜா இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அந்த பதிவில், ”அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்லா முடியா வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கான இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த "பொன்மகள் வந்தாள்" கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்..” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்