சந்தானத்தின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது..!

சந்தானத்தின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது..!

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் டிக்கிலோனா. இந்த படத்தில் சந்தானத்தோடு இந்திய அணியொம் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் அனகா மற்றும் ஷிரின் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

மேலும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதே போல் அடுத்தடுத்த நாட்களில் மேலும் இரண்டு தோற்றங்களை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்