5 ஆண்டுகளாக வெளியாகமல் இருந்த விஜய்சேதுபதி படம் வெளியாகிறது…

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் இடம் பொருள் ஏவல். இப்படத்தினை இயக்குநர் லிங்குசாமி தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. மேலும் 2014-ம் ஆண்டு இறுதியில் பாடல்களும் வெளியாகின.

தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு பின்னர் விஜய் சேதுபதி சீனு ராமசாமி கூட்டணி இந்தப் படத்தில் தான் இணைந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 5 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படம் திரைக்கு வராமல் இருந்தது.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு இந்தப் படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளார் லிங்குசாமி.

இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டரில் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், “சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை, இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்