ஜி.வி- கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகும் படம்.. ரசிகர்கள் ஆவல்

ஜி.வி- கவுதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகும் படம்.. ரசிகர்கள் ஆவல்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது நடிப்பாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளர்.  

இவர் கைவசம் நிறையப் படங்கள் உள்ளான அதில் ஒன்று இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு புதுப் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார்.

இந்தப் படத்தை கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்க இருந்தார். சில காரணங்களால் இந்நிறுவனம் விலக, தற்போது 'டிஜி ஃபிலிம் கம்பெனி' என்ற புதிய நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்ற்றும் வர்ஷா பொல்லம்மாவுடன் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

விரைவில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். இறுதி கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் ஆயத்தமாகி வருகிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்