இளம் பெண் தற்கொலைக்கு குரல் கொடுக்கும் ஷெரின்…

இளம் பெண் தற்கொலைக்கு குரல் கொடுக்கும் ஷெரின்…

மலேசியாவை சேர்ந்த திவ்யநாயகி இளம் பெண் பதிவு செய்த டிக் டாக் வீடியோவை நெட்டிசன்கள் கேலி செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகை ஷெரின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘போலி கணக்குகளில் ஒளிந்து கொண்டிருக்கும் கோழைகள், போலிகள் சேர்ந்து பொழுதுபோக்கிற்காக அப்பாவிகளை கேலி செய்து அவர்களது வாழ்வை நாசம் செய்து வருகின்றனர். 

ஒரு 20 வயது பெண்ணை கடுமையாக கேலி செய்து அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியவர்கள் வெட்கப்பட வேண்டும் உங்களுடைய இந்த சாதனைக்கு ஒரு பெரிய விருது தான் தர வேண்டும்.

சமூகவலைதளங்களில் நடக்கும் கொடுமையை தடுத்து நிறுத்துங்கள். நீங்கள் கேலி செய்வது உயிரற்ற ஒரு வீடியோவை அல்ல அதற்கு பின்னால் இருக்கும் உயிருள்ள மனிதரை. ஆன்லைன் சமூகத்துக்கு இது ஒரு வெட்கக்கேடான தருணம்.

திவ்யநாயகி தற்கொலை செய்து கொள்ளாமல் போலிகளுக்கு எதிராக போராடி இருக்கலாம் உயிரிழந்த திவ்யாவின் ஆன்மா சாந்தியடையட்டும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.09%
 • தவறான முடிவு
  20.8%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.89%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்