82 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய நடிகர் பிரித்விராஜ்!

82 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பிய நடிகர் பிரித்விராஜ்!

மலையாளப் படப்பிடிப்பிற்காக ஜோர்டான் சென்று சிக்கிக் கொண்ட நடிகர் பிரித்விராஜ், 82 நாட்களுக்கு பிறகு நாடு திரும்பினார்.  

கடந்த மார்ச் மாதம் பிரத்விராஜ் 58 பேர் கொண்ட குழுவினருடன் புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பெனியமினின் ஆடுஜீவிதம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் நடிப்பதற்காக, ஜோர்டான் சென்றார். அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும் போது, கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.

 அத்துடன் உலக நாடுகளின் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பிரத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் சொந்த ஊர் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் படக்குழுவினர் படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று பட வேலைகளை முடித்தனர். அதன்பிறகு 58 பேரும் ஜோர்டானிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.  

படப்பிடிப்பு குழுவில் மருத்துவர் இருந்ததால், அனைவரையும் அடிக்கடி பரிசோதித்தனர். தங்களை கேரளா அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நடிகர் பிரத்விராஜ் மற்றும் இயக்குநர் பிளஸ்சி உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர்.

 இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் அனுமதி கிடைத்ததால், 50 நாட்களுக்குப் பிறகு பிரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் வந்தே பாரத் சிறப்பு விமானம் மூலம் ஜோர்டானில் இருந்து டெல்லி திரும்பினர். பின்னர் அங்கிருந்து கொச்சிக்கு சென்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்