முந்தானை முடிச்சு ரீமேக் : 10 வருடங்களுக்கு பிறகு இயக்கத்தில் குதிக்கும் பாக்யராஜ்…

கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த ‘முந்தானை முடிச்சு’ திரைப்படம்  36 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் செய்யப்பட உள்ளது.

1983ஆம் ஆண்டு கே.பாக்யராஜ் இயக்கி, ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘முந்தானை முடிச்சு’. இப்படத்தில்  ஊர்வசி கோவை சரளா, தீபா, ‘பசி’சத்யா, நளினிகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏவிஎம் ஸ்டுடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

 இந்நிலையில் இந்த திரைப்படம் 36 வருடங்களுக்குப் பிறகு தற்போது ரீ-மேக் செய்யப்படுகிறது. இப்படத்தினை கே.பாக்யராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார். இதனை ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து முறைப்படி அனுமதி பெற்று  ஜேஎஸ்பி சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வுசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஊரடங்கால் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு அனுமதி அளித்தபிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான ‘சித்து +2’ படத்திற்கு பிறகு 10 வருடங்கள் கழித்து கே.பாக்யராஜ் திரைப்படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்