போனி கபூர் வீட்டில் வேலை செய்தவருக்கு கொரோனா தொற்று…

போனி கபூர் வீட்டில் வேலை செய்தவருக்கு கொரோனா தொற்று…

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி ஹிந்தி பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்தார். இவர் ஹிந்தி மற்றும் பல மொழிகளில் படங்களை தயாரித்து வருகிறார். ஸ்ரீதேவி மறைவுக்கு பின்னர் இவர் தமிழில் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தினை தயாரித்தார். அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது அதே கூட்டணியில் வலிமை படத்தை தயாரிக்கிறார். இந்த படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக முடங்கியுள்ளது. தற்போது போனி கபூர் தனது மகளுடன் மும்பையில் உள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டில் பணியாளராக இருக்கும் 23 வயது ஆன சரண் சாஹூ என்பவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனால் போனி கபூர் அவரது மகள் உள்ளிட்டவர்களுக்கும் நோய் தொற்றும் இருக்குமோ என்ற அச்சம் நிலவியது.

இந்நிலையில் போனி கபூர் வெளியிட்டுள்ள செய்தியில் நான் எனது மகள் மற்றும் மற்ற பணியாளர்கள் அனைவரும் நலமாக உள்ளோம். எங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாவிட்டது. நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. மருத்துவகுழு தந்துள்ள அறிவுரையை கண்டிப்பாக பின்பற்றுவோம். இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா அரசுக்கும், மும்பை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மிக்க நன்றி. சரண் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்