விண்ணை தாண்டி வருவாயா-2 உருவாகிறதா? வெளியானது சுவாரஸ்ய தகவல்…

விண்ணை தாண்டி வருவாயா-2 உருவாகிறதா? வெளியானது சுவாரஸ்ய தகவல்…

கடந்த 2010ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு-த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’. இந்தப் படம் நல்ல வெற்றியை பெற்றது. அத்துடன் இன்றளவும் இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள், வசனங்களை இப்போதும் காதலர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தப் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து விண்ணை தாண்டி வருவாயா இரண்டாம் -2 க்கான கதையை தயார் செய்துவிட்டார் கெளதம் மேனன். ஆனால் அதற்கான வாய்ப்புகளும் சரியாக அமையவில்லை.

இந்நிலையில், இந்தக் கதையின் சிறு பகுதியை எடுத்து ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். சிம்பு, த்ரிஷா இருவரும் இதில் நடித்துள்ளனர். ஊரடங்கு காலம் என்பதால், வீடியோ கால் மூலம் கெளதம் மேனன் சொல்வதைக் கேட்டு இருவரும் நடித்துள்ளனர்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்தக் குறும்படம்  விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்