மாஸாக தொடங்கிய ’மாஸ்டர்’ பட போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள்…

மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகல் தொடங்கியுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

பிகில் படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்த படத்தினை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் விஜய் சேதுபதி, மளவிகா மோகனன், சாந்தனு, மற்றும் பலர் நடித்துள்ளனர். 

இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருவதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு, பின்னணி பணிகள் என சினிமா உலகம் முழுவதும் முடங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இந்நிலையில் அவ்வபோது இந்த படம் தொடர்பான செய்திகள் இணையதளத்தில் பரவிய வண்ண,ம் இருந்தனர்.

இதற்கிடையில் சினிமாவில் பின்னணி வேலைகளை தொடங்க அனுமதி வழங்கியது. இதனால் தற்போது மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கின என்றும் ஆனால் படம் எப்போது வெளியாகும் என்று எந்த தகவலையும் வெளியிடவில்லை. 

மாஸ்டர் படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்