ஜோதிகாவை அடுத்து கீர்த்தி சுரேஷின் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்

ஜோதிகாவை அடுத்து கீர்த்தி சுரேஷின் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண்குயின் திரைப்படமும் நேரடியாக OTT பிளாட்பார்மில் ரிலீஸாக உள்ளது.
அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து புது படமொன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் 
தயாரிக்கிறது. 
தயாரிப்பு வேலைகள் முடிந்து ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் எப்போது திரையரங்குகள் திறக்கப்படும் என்ற நிச்சயமற்ற தன்மை நிலவி வரும் நிலையில் , பெண்குயின் படத்தையும் அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஏற்கனவே ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் இதுபோல ரிலிஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

 • சரியான முடிவு
  59.09%
 • தவறான முடிவு
  20.8%
 • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  11.89%
 • படத்தின் லாபத்திற்கு உதவும்
  8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்