அண்ணாத்த ஆஜர் எப்போது…? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

அண்ணாத்த ஆஜர் எப்போது…? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168-வது படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குகிறார். 

இந்தப் படத்துக்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

கடந்த 50 நாள்களுக்கும் மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு பணிகள் முழுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் பல படங்கள் திட்டமிட்டபடி திரைக்கு வருவது கேள்விக்குறியாகியுள்ளது. 

இந்நிலையில், அண்ணாத்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு பொங்கலில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், 2020-ம் ஆண்டு பொங்கலில் ரஜினி நடித்த தர்பார் படமும் திரைக்கு வந்தது. 2021ம் ஆண்டு அண்ணாத்த படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
  • தவறான முடிவு
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
  • படத்தின் லாபத்திற்கு உதவும்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்