கொரோனாவுக்கு பலியான பிரபல நடிகை..!

கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது. பிரபல நடிகர்-நடிகைகளும் இந்த வைரஸில் சிக்கி பலியாகிறார்கள். ஏற்கனவே கொரோனாவால் ஹாலிவுட் நடிகர்கள் ஆண்ட்ரூ ஜாக், மார்க் ப்ளம், ஜப்பான் நடிகர் கென் ஷிமூரா, அமெரிக்க பாடகர் ஜோ.டிப்பி, இங்கிலாந்து நகைச்சுவை நடிகர் எட்டி லார்ஜ் ஆகியோர்  பலியாகி உள்ளனர். 

இந்நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் பலியாகியுள்ளார். அவரது பெயர் பேட்ரிசியா பாஸ்வொர்த். 

சில தினங்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் அதிகமானதால் பரிசோதனை செய்தனர். அப்போது கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி பேட்ரிசியா பாஸ்வொர்த் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. இவர் பிரபல எழுத்தாளரும் ஆவார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்