ரசிகர்கள் எதிர்ப்பு.. டிவிட்டர் பதிவை நீக்கிய அமிதாப்பச்சன்!

கொரோனா வைரஸ் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் ஒரு ட்வீட் செய்துவிட்டு அதனை அவரே நீக்கிவிட்டார். அந்த பதிவில், 'மார்ச் 22 அன்று அமாவாசை, இந்த மாதத்தின் இருட்டான நாள். வைரஸ், பாக்டீரியா ஆகிய தீய சக்திகள் சக்தி வாய்ந்தவையாக இருக்கும். கைதட்டுவதால் அவற்றின் சக்தி குறையும்' என்று குறிப்பிட்டிருந்தார். இது வாட்ஸ் அப்பில் வந்த போலியான தகவல் என பலரும் கமெண்ட் செய்தனர். உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டார்.

பிரபலங்கள் கொரோனா பற்றி சொல்லும் போது அதில் இருக்கும் உண்மைத் தன்மையை தெரிந்து கொண்டு கருத்து சொல்ல வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  59.61%
 • தவறானது
  17.9%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.9%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.6%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்