நடிகை அமலாபால் இரண்டாவது திருமணம்..!

நடிகை அமலாபால், இயக்குநர் விஜய்யை காதலித்து 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனையடுத்து இயக்குநர் விஜய், தனது பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

அமலாபால் தான் ஒருவரை காதலிப்பதாக பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் அவர் யார் என்ற தகவலை பகிரவில்லை. சமீபத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆடை படத்தில் துணிச்சலாக நடித்த காரணத்திற்காக அமலாபாலை பலரும் பாராட்டினர்.

இந்நிலையில் அமலா பாலும், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கும் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆனால் இதுகுறித்து அமலாபால் எதுவும் வாய் திறக்கவில்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்