அடுத்த மாதம் தொடங்குகிறதா தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தினை தொடர்ந்து தற்போது அடுத்த படத்தில் நடிக்க நடிகர் விஜய் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தளபதி 64வது படமான மாஸ்டர் படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் இப்பட இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் ட்ரைலர் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தினை தொடர்ந்து விஜய் தனது 65 படத்திற்கு தயாராகி வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனை தொடர்ந்து அடுத்தப்படத்தை எந்த இயக்குநர் இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில் இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்,பாண்டியராஜன், அருண்ராஜா காமராஜ், பார்த்திபன், சுதா கொங்கரா, அஜய் ஞான்முத்து என பலரின் பெயர் அடிப்பட்டு வருகிறன.

இதில் ஏ.ஆர்.முருகதாஸூக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே விஜய்-முருகதாஸ் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. இதில் துப்பாக்கி-2 படமாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்