ஆதங்கத்தை வெளிக்காட்டிய இயக்குனர் சேரன்..

திரைப்படங்களில் சாமானிய மனிதனின் இயல்பு நிலை மாறாமல் திரைப்படத்தை வெறும் கதையோட்டமாக இல்லலாமல் உயிரோட்டமாக மக்களுக்கு கொண்டுப்போய் சேர்க்கும் சில இயக்குனர்களில் சேரன் முக்கியமானவர். இவரது ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், வெற்றிகொடிக்கட்டு என பல படங்கள் மக்கள் இன்றளவும் தங்களது வாழ்வியலுடன் நினைத்துப்பார்க்கும் படங்கள். இயக்கம், நடிப்பு என இருந்த இயக்குனர் சேரன் திடீரெனெ தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றவுடன் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்றார். அங்கு பல தடைகளை கண்டாலும் தனது இயல்பு நிலை மாறாமல் இருந்து உள்ளே எப்படி சென்றாரோ அதே போல் வெளியே வந்தார்.

பிக்பாஸ்ஸிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராஜாவுக்கு செக். த்ரில்லர் படமான ராஜாவுக்கு செக், சில காரணங்களால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதுகுறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த சேரன் தற்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ட்விட்டரில் ரசிகை ஒருவர் ராஜாவுக்கு செக் திரைப்படத்தை த்ரில்லர் பொழுதுபோக்கு படம் என சேரனை குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார்.

இதனை குறிப்பிட்ட சேரன் "அநியாயமா கொன்னுட்டாங்கம்மா படத்தை.. எங்க ஆத்தா கொடுத்த பால் எல்லாம் ரத்தமா போகுதேன்னு தேவர் மகன்ல டயலாக் இருக்கும்.. அப்படி கஷ்டபட்டு உழைச்சதை காசுக்கு ஆசைப்பட்ட நாய்ங்க கொன்னுட்டங்கம்மா.. அவனுக நல்லா இருப்பாங்கன்றீங்க.. வயிறு எரியுதும்மா.. சும்மா விடாது எங்களோட உழைப்பு.." என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்