விஜய் விக் பயன்படுத்துகிறாரா? ரசிகருக்கு ஸ்ரீமன் பதில்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. 

இசை வெளியீட்டு விழாவில், விஜய்யின் ஹேர் ஸ்டைலை நெட்டிசன்கள் சிலர் கலாய்த்தனர். அவரது ஹேர் ஸ்டைலை பார்க்கும் போது அவர் விக் பயன்படுத்துகிறார் என்ற சந்தேகம் வருவதாக கூறினர். இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீமன் ட்விட்டரில் ரசிகர்களுடன் லைவ் சேட்டிங் செய்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், ‘விஜய் ஏன் விக் பயன்படுத்துகிறார்’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஸ்ரீமன், ‘இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அவர் எது செய்தாலும் அது படக்குழுவினரால் வடிவமைக்கப்பட்டதாக தான் இருக்கும். படம் பாருங்க. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. வெறும் அமைதி மட்டும் தான். கொரோனாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மாஸ்டர் படத்தில் எனது நண்பர் விஜய்யை உங்களுக்கு பிடிக்கும்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்