நயன்தாரா-விக்னேஷ்சிவன் படத்தில் இணைந்தார் நடிகர் அஜ்மல்...

நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடிக்கிறார். 

இயக்குநர் விக்னேஷ் முதன்முறையாக தயாரிக்கும் படம் நெற்றிக்கண். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்த படம் 2011ம் ஆண்டு வெளியான ப்ளைண்ட் என்ற கொரியா படத்தின் ரீமேக்காகும். 

அவள் படத்தினை இயக்கிய மிலந்த் ராவ் இப்படத்தினை இயக்கி வருகிறார். கிரிஷ் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 80% நிறைவடைந்துள்ளது. கொரோனா வைரஸால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்த படத்தில் திருப்பம் ஏற்படுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் அச்சம் விலகிய பிறகு மீண்டும் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
    58.45%
  • தவறானது
    19.67%
  • வழக்கமான விமர்சனம் தான்
    17.31%
  • கருத்துக் கூற விரும்பவில்லை
    4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்