கொரோனா வைரஸுக்கு வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய சார்மி..!

கொரோனா வைரஸுக்கு வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய சார்மி..!
கொரோனா வைரஸுக்கு வாழ்த்து கூறி சர்ச்சையில் சிக்கிய சார்மி..!

கொரோனா வைரஸுக்கு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டு நடிகை சார்மி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கொரோனா வைரஸுக்கு வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டு நடிகை சார்மி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  

சீனாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் தொற்றால் பல ஆயிர கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றுகாரணமாக இதுவரையில் சீனாவில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.டெல்லி, ஐதராபாத் நகரங்களை சேர்ந்த இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இதுகுறித்து நடிகை சார்மி நேற்று தனது டிக்டாக் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார், அதில், “வாழ்த்துக்கள் நண்பர்களே. உங்களுக்கு ஒன்று தெரியுமா? கொர்ரோனா வைரஸ் டெல்லிகும், தெலங்கானாவுக்கு வந்துவிட்டதாம். இதை நான் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். கொரோனா வைரஸ் வந்துவிட்டது" என்று மகிழ்ச்சியாகப் பேசியிருந்தார்.

இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து, இதற்கு தாம் மன்னிப்பு கேட்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com