வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்துல் காலிக் என்ற இஸ்லாமியர் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை சமீபத்தில் விமரிசையாகக் கொண்டாடினார். இதுதொடர்பாக வீடியோக்கள் யூடுயூபில் வைரலாக பரவியது. இயக்குநர் வெங்கட் பிரபு இந்த இந்த வீடியோவை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சிம்புவின் புதிய மாற்றம் குறித்த தன்னுடைய கருத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும் போது, "ஒவ்வொரு பிறந்தநாளும் புதிய தொடக்கம். இந்த பிறந்தநாள் சிம்புவுக்குப் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். என்னோட அப்துல் காலிக்கை உங்களிடம் அறிமுகம் செய்ய, பொறுமையின்றி காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.