ராதிகாவை ஆண்டி என அழைப்பது தவறில்லை...வரு ஓபன் டாக்

ராதிகாவை ஆண்டி என அழைப்பது தவறில்லை...வரு ஓபன் டாக்

நடிகை வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் நாயகி, வில்லி என பன்முக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

நடிகை வரலட்சுமி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் நாயகி, வில்லி என பன்முக நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவர் எப்போதும் தனது மனதில் பட்டத்தை பளிச் என்று யாருக்கும் அஞ்சாமல் சொல்லிவிடுவார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், படவாய்ப்பு தருவதாகக்கூறி ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேயன், சரத்குமாரை அப்பா என்று அழைத்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக வரலட்சுமியிடம் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டியில் கேள்வி எழுப்பபட்டது. இதற்கு பதில் அளித்த வரு, ரேயனுக்கு ஒரு அப்பாவாக அவர் அனைத்தையும் முறையாக செய்துள்ளார். அவரை ரேயன் அப்பா என்று அழைப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். 

மேலும் அந்த பேட்டியில் நீங்கள் ஏன் ராதிகாவை ஆண்ட்டி என்று அழைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.  அவர் எனது அப்பாவுக்கு இரண்டாவது மனைவி அவ்வளவு தான். எனக்கு அம்மா கிடையாது. எல்லாருக்கும் ஒரு அம்மாதான் இருக்க முடியும். என் அம்மா சாயா தான். அவரை ஆண்ட்டி என்று அழைப்பதால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார். சரத்குமார் ஏற்கனவே சாயா என்பவரை திருமணம் செய்து, அவரிடம் இருந்து விவகாரத்துப் பெற்றுவிட்டார். அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் வரலட்சுமி. அதே போல ராதிகா வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து பெற்றிருக்கிறார். அவர்களுக்குப் பிறந்தவர்தான் ரேயன்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com