மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கிறாரா சிம்பு?

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கியவர் மிஷ்கின்.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களை இயக்கியவர் மிஷ்கின். 

இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சைக்கோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நிறைவடைந்தது. 

இந்நிலையில் விஷாலுடனான கருத்துவேறுபாடு காரணமாக மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். மீதம் உள்ள படத்தினை விஷால் இயக்கவுள்ளார். 

இதனை தொடர்ந்து மிஷ்கின் தனது அடுத்தப் பட வேலைகளை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு, அந்த படம் முடிவடைந்த பிறகு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. 

மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com