கங்கனா பாராட்டும்படி நடிக்க ஆசை… ஆலியா பட்!

கங்கனா பாராட்டும்படி நடிக்க ஆசை… ஆலியா பட்!
கங்கனா பாராட்டும்படி நடிக்க ஆசை… ஆலியா பட்!

ரன்வீர், ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள படம் கல்லி பாய்.

ரன்வீர், ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள படம் கல்லி பாய். இந்தப் படத்தில் ஆலியா பட் கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது நடிப்பை மணிகர்னிகா படத்தில் நடித்த கங்கனா ரணாவத் நடிப்புடன் ஒப்பிட்டு சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.

இதுகுறித்து கங்கனா கூறும் போது, ‘என்னுடன் ஆலியாவின் நடிப்பை ஒப்பிட்டு என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள். என்னிடம் ஒப்பிட ஆலியாவின் கேரக்டரில் என்ன இருக்கிறது. சினிமாவில் சிறு பிள்ளைகளை தலையில் தூக்கி வைத்து ஆடுவதை நிறுத்த வேண்டும். சாதாரண நடிப்பை பாராட்டுவதை நிறுத்தினால் தான் நடிப்பின் தரம் உயரும்’ என்றார்.

அவரது கருத்துக்கு பதிலளித்துள்ள ஆலியா பட், ‘கங்கனாவின் கருத்து அவருடைய சொந்த கருத்து. ராசி படத்தில் நான் நடித்ததை தொடர்ந்து என்னை பலமுறை அழைத்து பாராட்டினார். இப்போது கூட அவர் என்னை பாராட்டவில்லை என வருத்தப்படுவதை விட்டுவிட்டு, அவர் பாராட்டும் வகையில் அடுத்தடுத்து நடிக்க தான் ஆசைப்படுகிறேன். அவர் என்னை மோசமாக விமர்சனம் செய்தது, என்னை மேம்படுத்துவதற்கான தொடக்கம் தான்’ என கூறியுள்ளார். 

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com