மதன் கார்க்கியின் பாகுபலி மொழி அறிமுகம்...

ராஜமவுலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் இடம்பெற்ற காலகேயர்கள் பேசும் "கிளிக்கி" மொழி உலகம் எங்கும் வெகுவாக வரவேற்பைப் பெற்றது. இந்த மொழி அத்திரைப்படத்துக்கு வசனம் எழுதிய மதன் கார்க்கியால் உருவாக்கப்பட்டது. 

இந்நிலையில் உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு மதன் கார்க்கி நேற்று அந்த மொழியை ராஜமவுலியை வைத்தே அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த கிளிக்கி மொழிக்கான எழுத்துகள் மற்றும் எண்களை கற்றுக்கொள்ள கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லைஃபா நிறுவனத்தால் புதிதாக வடிவமைக்கப்பட்ட புதிய இணையதளத்தையும் ராஜமவுலி வெளியிட்டார். 

உலக மொழிகளில் எழுத்து வடிவங்களையும் அவற்றைக் கற்பதில் உள்ள சிரமங்களையும் ஆராய்ந்து கிளிக்கி மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மொழியின் எண்களை இரண்டு நிமிடங்களில் கற்க முடியும். ஒரு மணிநேரக் கற்றலின் மூலம் இந்த மொழியை எழுத மற்றும் படிக்க கற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்த கிளிக்கி மொழியை கற்க 22 குறியீடுகளை அறிந்தால் போதும். 

கிளிக்கி மொழியில் உள்ள உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மற்றும் சிறப்பு சொடுக்கொலிகளை எப்படி உச்சரிக்க வேண்டும் மற்றும் எழுத வேண்டும் என்பது காணொளி மூலம் இந்தத் தளத்தில் கற்பிக்கப்படுகிறது. 

மேலும் கிளிக்கி மொழியில் பாடல்களும், கதைகளும், இலக்கண நூல்களும் விரைவில் வெளியாகவுள்ளது. கிளிக்கி மொழி பயில்வோருக்கான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம், சாதி, மதம், இனம், நாடு போன்ற எல்லைகளின்றி விரிந்து உலகை இணைக்கும் ஒரு மொழியாக கிளிக்கி மொழி இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது. கிளக்கி மொழியை பயில விரும்புவோர் https://www.kiliki.in/  என்ற இணைய தளத்தில் விலையின்றிக் கற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்