விஜய்க்காக குரல் கொடுக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விஜய்- விஜய் சேதுபதி காம்போவை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியானது. விஜய் பாடியுள்ள இந்தப் பாடல் அதிகமான வியூஸ், லைக்ஸ்கள் பெற்று அசத்தி வருகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்புக்காக விரைவில் பாடல் பதிவு நடக்கவிருக்கிறது.
குட்டி ஸ்டோரி பாடலை தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆர் பாட ஒப்புக் கொண்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அவர், நடிகர் விஜய்க்காக பாடவிருக்கும் தகவல் அறிந்து இருவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
Pollsகருத்துக் கணிப்பு

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!
-
வரவேற்கக்கூடியது
-
தேர்தல்நேர அறிவிப்புகள்
-
கடன்சுமை அதிகரிக்கும்
-
கருத்தில்லை