விக்ரம் சுகுமாரன்- தினேஷ் கூட்டணியில் ’தேரும் போரும்’…

மதயானைக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தென்தமிழக வாழ்வியலை அழகாக எடுத்துக் கூறி தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகும் படம் "தேரும் போரும்". 

அட்டகத்தியில் அறிமுகமாகி  குக்கூ,விசாரணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் நடித்த தினேஷ் ’தேரும் போரும்’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். மைனா,கும்கி, பைரவா,ஸ்கெட்ச் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்குனராவும், லாரன்ஸ் கிஷோர் எடிட்டராகவும் பணியாற்றுகின்றனர். 

மிகுந்த பொருட்செலவில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பங்குபெரும் “தேரும் போரும்” படத்திற்கு இப்போதே சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல்வாரத்தில் சிவகங்கை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில்  தொடங்கவிருக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.45%
 • தவறானது
  19.67%
 • வழக்கமான விமர்சனம் தான்
  17.31%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.57%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்