விக்னேஷ் சிவனை பாராட்டிய பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர்...

2015-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நானும் ரவுடி தான் படத்தின் கூட்டணி மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இணைந்துள்ளது. விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, ஆகியோருடன் சமந்தாவும் இதில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் தலைப்பு வீடியோவை, படக்குழு காதலர் தினத்தன்று வெளியிட்டது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அத்துடன் பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இந்நிலையில் பாலிவுட் முன்னணி இயக்குநர் கரண் ஜோகர் இந்த வீடியோவை வியந்து பாராட்டியுள்ளார். மிகவும் புதுமையான முறையில் வீடியோ இருந்ததாக படக்குழுவினரிடம் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
28.4% -
அனுபவக் குறைவு
24.39% -
கிரிக்கெட் அரசியல்
35.54% -
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
11.67%