ரொம்ப வேலை வாங்கிட்டார்… மனம் திறக்கும் ராணா!

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்தின் போஸ்டர்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இன்று சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ராணா, ‘ எனக்கு ஆக்‌ஷன் படங்களில் நடிப்பது பிடிக்கும். பாகுபலியை தொடர்ந்து ஒரே வாரத்தில் காடன் படத்தில் கஷ்டத்தை அனுபவித்தேன். ராஜமவுலியை விட பிரபுசாலமன் என்னை அதிகம் வேலை வாங்கிவிட்டார். அதனை நான் ராஜமவுலியிடன் போன் செய்து சொல்லியிருக்கிறேன்.

10 வருடங்களுக்கு முன்பு தமிழ் படங்களில் நடிக்க முயற்சித்து பிரபுசாலமனிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது அதற்கேற்ற நேரம் வரவில்லை. காடன் அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறது. படப்பிடிப்பு ஜாலியாக இருந்தது என்றால் அதற்கு விஷ்ணு விஷால் தான் காரணமாக இருக்க முடியும்’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்