போயி வேற வேலை இருந்தா பாருங்கடா.. விஜய்சேதுபதி ட்வீட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் விஜய், ஏஜிஎஸ் நிறுவன அலுவலகங்கள், பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மாஸ்டர் படப்பிடிப்புக்காக நெய்வேலியில் இருந்த விஜய்யை வருமான வரித்துறையினர் அவரது காரிலேயே சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விஜய் வீட்டில் நடந்த ரெய்டு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வந்தன. விஜய்க்கு நெருக்கமான கல்லூரி நிர்வாகத்தின் பெண் உரிமையாளர் ஒருவர் இந்துக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி எடுத்து வருவதாகவும், இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல் பரவியது. விஜய் சேதுபதி, ஆர்யா, ரமேஷ் கண்ணா, ஆர்த்தி உள்ளிட்டோர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும் பரவியது. இதனால் தான் ரெய்டு நடத்தப்பட்டதாக இணையத்தில் ஒரு தகவல் பரவியது.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு பதிலளித்துள்ள விஜய்சேதுபதி, ‘போயி வேற வேலை இருந்தா பாருங்கடா’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்