ஏஜிஎஸ் சார்பில் நேரில் ஆஜரானார் அர்ச்சனா கல்பாத்தி...

நடிகர் விஜய்க்கு உட்பட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தாயாரிப்பில் வெளியானது.  180 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த படம் 300 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். 

அந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணப்பரிவர்த்தனை ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி விஜய் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று மாலை விஜயின் ஆடிட்டர்களும் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விவரங்களை பிரமாண பத்திரமாக அளித்து விட்டு சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இன்று ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்