அவன்-இவன் படத்திற்கு பிறகு இணையும் விஷால்-ஆர்யா கூட்டணி...

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள புதிய படத்தில் வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் படத்தைத் தொடர்ந்து சக்ரா மற்றும் துப்பறிவாளன் 2 படங்களில் நடித்து வருகிறார் விஷால். இதில் சக்ரா படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது துப்பறிவாளன்-2 படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படங்களை தொடர்ந்து விஷால் அடுத்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தினை விஷால் ஃபிலிம் பேக்டை நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைக்கான தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த படத்தில் ரீத்து வர்மா நடிக்கவுள்ளதாகவும், வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு தமன் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்