காதலர் தினத்தில் காதலன் 2 அப்டேட்..? ரசிகர்கள் ஆர்வம்...

தமிழ், ஹிந்தி மொழிகளில் இயக்கம் நடிப்பு என பிஸியாக இருப்பவர் பிரபுதேவா. தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக தேவி 2 படம் வெளியானது. அதனை தொடர்ந்து பொன்மாணிக்கவேல் படம் வெளியாக ரெடியாகவுள்ளது. இதனை தொடர்ந்து வேறு சில படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படமும் ரிலிஸுக்கு தயாராகி வருகிறது. 

இந்நிலையில் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தினை இயக்கியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

பரதன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் காதலன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்