10 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழ் படம்... போஸ்டரிலும் குறும்பு...

தமிழ் படம் வெளியாகி 10வது ஆண்டில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு படக்குழு தற்போது நமது நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை அடிப்படையாக கொண்டு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. 

2010ம் ஆண்டு சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே நடிப்பில் வெளியான படம் தமிழ் படம். இப்படம் முன்பு வெளியான தமிழ்ப் படங்களின் காட்சிகளைக் கிண்டல் செய்யும் விதமாக அமைந்திருந்தது. இப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகம் 2018ம் ஆண்டு வெளியானது. 

இந்நிலையில் இந்த படம் வெளியாகி இன்று (ஜனவரி 29) 9 ஆண்டுகளை நிறைவு செய்து 10வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இதிலும் தங்களுடைய வித்தியாசத்தைக் காட்டியுள்ளது. அந்த போஸ்டரில் 'NO CAA, NO NPR, NO NRC' என்று தெரிவித்துள்ளது. 

அத்துடன் அந்த படக்குழுவின் குறும்புதனத்தையும் அந்த போஸ்டரில் பிரதிபலிக்கும் வகையில், No CAA- No Cutout Atrocities by Agilaulaga super star(கட் அவுட் அராஜகம் பண்ணாத அகில உலக சூப்பர் ஸ்டார்), No NPR- No Nonsensical Problem during Release, (வெளியீட்டின் போது அர்த்தமற்ற பிரச்சினைகள்)No NRC- No Nadigar sangam Related Controversies (நடிகர் சங்கம் தொடர்பான பிரச்சினைகள்)என்று தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்