நிசப்தம் படம் தள்ளிப் போக காரணம் இதுதானாம்...

பாகமதி படத்தினை தொடர்ந்து நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள படம் நிசப்தம். ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் மாதவன், அஞ்சலி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் என 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படம் முதலில் ஜனவரி 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 20ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

இப்படம் தெலுங்கை தவிர மற்ற மொழிகளில் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் தரவில்லையாம் அதனாலேயே இந்த படம் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் நிறைவு பெறவும் தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. 

பெரிய அளவில் வெளியீடு என்பதால் வெளியாகும் எல்லா மொழிகளிலும் நல்ல பிரமோஷன் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்