மாஸ் காட்டும் தல... வெளிநாட்டில் படமாகிறது வலிமை...

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தினை தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகவுள்ளது. இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் அதனாலேயே தற்போது உடற்பயிற்சி செய்து இளமையான தோற்றத்திற்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கிடையில் வலிமை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் சென்னையில் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இந்த படத்தில் ஹூமா குரேஷி நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகின்றன. இவர் ஏற்கெனவே காலா படத்தில் நடித்துள்ளார். 

வலிமை படத்தில் அஜித்துக்கு பிடித்தமான பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த காட்சிகளை சுவிட்சர்லாந்தில் படமாக்க உள்ளதாகவும், இதற்காக தயாரிப்பாளர் போனிகபூர் அந்த நாட்டுக்கு சென்று சிறப்பு அனுமதி பெற்று இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை படப்பிடிப்பு முடிந்ததும் வட இந்தியா சென்று முக்கிய காட்சிகளை படமாக்குகிறார்கள். அதை முடித்துவிட்டு பைக், கார் பந்தைய காட்சிகளை படமாக்க அஜித்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்