மோகன் லால் படத்தில் ஜாக்கி சான்?

உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான். இவரது சண்டை காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் நடிக்கவில்லை என்றாலும் இவரது மார்க்கெட் குறையப்போவதில்லை. 

இந்நிலையில் கேரள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் உடன் ஜாக்கி சான் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல்பர்ட் ஆண்டனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கவிருப்பதாக தெரியவந்துள்ளது. 

இந்தப் படத்தின் கதை சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற வரலாற்றை கொண்டு உருவாகவுள்ளது. இப்படத்தில் ஜாக்கி சான்  இணைவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

 • உண்மைதான்
  58.37%
 • தவறானது
  18.81%
 • வழக்கமான விமர்சனம் தான்
  18.22%
 • கருத்துக் கூற விரும்பவில்லை
  4.59%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்