காக்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது…

காக்கி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது…

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது இசைக்கு தற்காலிக ப்ரேக் கொடுத்து விட்டு தனது முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தியுள்ளார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது இசைக்கு தற்காலிக ப்ரேக் கொடுத்து விட்டு தனது முழு கவனத்தையும் நடிப்பில் செலுத்தியுள்ளார். அவர் நடிப்பில் வெளியான திமிரு பிடிச்சவன் படத்தினை தொடர்ந்து அவர் தமிழரசன், அக்னிச் சிறகுகள், என்ற படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழரசன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. 

இந்நிலையில் தற்போது இவர் காக்கி டா என்ற படத்தில் நடிக்கவுள்ளார். வாய்மை படத்தினை இயக்கிய ஏ.செந்தில் குமார் இப்படத்தினை இயக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்முறையாக சிக்ஸ் பேக்ஸ் வைத்து நடிக்கிறார். மேலும் இவர் திமிரு புடிச்சவன் படத்தினை தொடர்ந்து இப்படத்திலும் போலீஸாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com