கீர்த்தி சுரேஷால் அழுதேன்... ஜான்வி கபூர் ஓபன் டாக்...

கீர்த்தி சுரேஷின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுததாக நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். 

நடிகை ஸ்ரீதேவி-தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் .கடந்த 2018ம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த இவர் தற்போது சில பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் படங்களில் விரைவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில், கீர்த்தி சுரேஷின் நடிப்பு குறித்து பேசினார். அவர் கூறுகையில், “ நான் கீர்த்தியின்  ரசிகை. ‘மகாநடி’ படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று எனக்கே தெரியாது. அழுது கொண்டே அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினேன். அப்போது நான் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் செய்தது அவர் மீது இருந்த உண்மையான அன்பினால் தான்” என்று கூறினார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்