மலேசியாவில் தொடங்கும் சிம்புவின் மாநாடு…

நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள மாநாடு படம் பல சர்ச்சைகளுக்கு பிறகு படமாவது உறுதியாகி ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறன. 

முதலில் இந்த படம் உருவாகுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது. ஆனால் இருதரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையினால் எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சிம்புவின் மாநாடு பட த்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், நடிகர் கருணாகரன் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அத்துடன்சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் பிரேம்ஜி நடிக்கவுள்ளார். 

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி மலேசியாவில் தொடங்கவுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுகவை இஸ்லாமியர்கள் நம்ப வேண்டாம் என இல. கணேசன் கூறுவது ?

  • உண்மைதான்
  • தவறானது
  • வழக்கமான விமர்சனம் தான்
  • கருத்துக் கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்