எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அரவிந்த் சாமி.. தலைவி படத்தின் புதிய வீடியோ, புகைப்படங்கள் வெளியீடு…!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதை திரைப்படத்தில், ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைபடம் உருவாகி வருகிறது. இப்படத்தை மதராசப்பட்டினம், தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குனர் விஜய், இரு மொழிகளிலும் இயக்குகிறார்.

இத்திரைப்படத்தின் கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும், இயக்குநர் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதுகிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஜ் ஆர்.சிங். ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை ஜி.வி.பிரகாஷ். இப்படம் ஜூன் 26 அன்று வெளியாகியுள்ளது. 

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான இன்று, அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்த ஒரு பாடலின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தில் அமைதியாக இருக்கும் இஸ்லாமியர்களை திமுக போராட தூண்டி விடுவதாக பொன்.ராதா கூறுவது

  • உண்மை தான்
  • இல்லை
  • பொய்யான குற்றச்சாட்டு
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்