பரியேறும் பெருமாள் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் கதிர். இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் சிகை என்ற படம் வெளியானது.
பரியேறும் பெருமாள் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் கதிர். இப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் சிகை என்ற படம் வெளியானது. இப்படம் டிஜிட்டலில் மட்டுமே வெளியானது.
இதனை தொடர்ந்து கதிர் தளபதி-63, என பல படங்களில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் சத்ரு. இப்படத்தில் இவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.
இப்படம் மார்ச் ஒன்றாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் சில காரணங்களால் இப்பட ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது