24 மணி நேரமாக சிக்கித் தவித்த அதர்வா!

துபாயில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழையால் விமானங்கள் தாமதமாகியுள்ளன. 

இந்நிலையில் நடிகர் அதர்வா, கண்ணன் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பிற்காக அஸர்பைஜான் செல்லவிருந்தார். ஆனால் மழையால் விமானங்கள் தடைபட்டதால், அஸர்பைஜானுக்கு செல்லும் பயணத்தின் இடையே சிக்கிக் கொண்டார். இதனால் அவர் துபாய் விமான நிலையத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்ததாக தெரிகிறது. 

ஓடுபாதைகளை சரி செய்யும் வரை அவர் விமான நிலையத்தில் காத்திருக்க நேர்ந்தது. அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி அஸர்பைஜான் சென்றுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 28ம் தேதி வரை அங்கு நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

  • வரவேற்கத்தக்கது
  • கட்சிகளுக்கு நல்லதல்ல
  • அதிருப்தி
  • கருத்து சொல்ல விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்