தர்பாரால் பாதிக்கப்பட்ட வாழ்க விவசாயி!

தர்பாரால் பாதிக்கப்பட்ட வாழ்க விவசாயி!

அப்புக்குட்டி கதாநாயகனாக நடித்துள்ள படம் வாழ்க விவசாயி. ஒரு ஏழை விவசாயி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகியுள்ளது. அதனால் பொங்கல் அன்று படத்தை வெளியிட அனைத்து ஏற்பாடுகளையும் படக்குழு செய்தது. ஆனால் ரஜினி நடித்த தர்பார் படம் நிறைய தியேட்டர்களில் இடம் பிடித்து கொண்டதால் வாழ்க விவசாயி வெளிவரவில்லை.

இதுபற்றி அப்புக்குட்டி கூறும் போது, ‘சினிமாவுக்கு வருவதற்கு முன்பு வரை விவசாய வேலை தான் செய்து கொண்டிருந்தேன். எனக்கு விவசாய வேலைகள் அனைத்தும் தெரியும். இந்தப் படத்தில் விவசாயத்துக்கு எதிரான வணிக அரசியல் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தை பொங்கலுக்கு வெளியிட ஆர்வமாக இருந்தோம். ஆனால் தர்பார் ரிலீஸ் ஆனதால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. விவசாயின் வாழ்க்கை தான் போராட்டம் என்றால், விவசாயி பற்றி படம் எடுத்தால் அதை வெளியிடுவதும் போராட்டமாகத் தான் இருக்கிறது’ என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழ் திரைப்படங்களை நேரடியாக ஆன்லைனில் திரையிடுவதை பற்றி உங்களது கருத்து.?

  • சரியான முடிவு
    59.09%
  • தவறான முடிவு
    20.8%
  • படம் வெற்றி பெறுவதே முக்கியம்
    11.89%
  • படத்தின் லாபத்திற்கு உதவும்
    8.22%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்