கிரிக்கெட் வீராங்கனையாக களமிறங்கும் அனுஷ்கா சர்மா…

விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை வரலாறு சினிமாவாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மில்கா சிங், மேரி கோம், தோனி, சச்சின் ஆகியோர் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து தற்போது கபில் தேவ், சாய்னா நேவல், மித்தாலி ராஜ் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகின்றன. 

இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. இவர் இதுவரையில் ஒருநாள் போட்டிகளில் 200க்கும் அதிகமான விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அத்துடன் சில சமயம் பின்வரிசையில் இந்திய அணிக்காக பேட்டிங்கிலும் கைக்கொடுத்துள்ளார். இவர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார். 

இந்த படத்தில் ஜூலன் வேடத்தில் அனுஷ்கா சர்மா நடிக்கவுள்ளார். இதற்காக பயிற்சியில் ஈடுபட இவர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு செல்லவுள்ளார். அனுஷ்கா சர்மா இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

திமுக- காங்கிரஸ் கூட்டணி விரிசல்

 • வரவேற்கத்தக்கது
  59.49%
 • கட்சிகளுக்கு நல்லதல்ல
  29.75%
 • அதிருப்தி
  4.43%
 • கருத்து சொல்ல விரும்பவில்லை
  6.33%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்